கரூர், ஆக. 14: கைம் பெண்களுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து கரூர் மாவ ட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறி ப்பில் தெரிவித்துள்ளதாவது:
ஏழ்மை நிலையில் உள்ள, கணவனை இழந்த, கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற முப்பத்து எட்டாயிரத்து எழநூறு பெண்களுக்கு, நாட்டின கோழிக்குஞ்சுகள் வழங்கப்படுகிறது. ஒரு பயனாளிக்கு 40 கோழிக்குஞ்சுகள் வீதம் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படவுள்ளன.
தேர்வு செய்யப்பட்ட பெண் ஏழையாக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், உடல் ஊனமுற்றோர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும், கோழி வளர்ப்பில் அதிக ஆர்வம் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.பயனாளி சொந்த செலவில் ரூ.3200 செலவில் கொள்முதல் செய்திட திறன் பெற்றவராக இருக்க வேண்டும். சுயசான்று வழங்கிய ரசீது சமர்ப்பிக்கப்பட்டவுடன் 50 சதவீதம் மானியம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பதிவு செய்யப்பட்ட சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயனாளி முந்தைய ஆண்டுகளில் கறவை மாடு, ஆடு, செம்மறியாடு திட்டம் அல்லது கோழிப்பண்ணை திட்டங்களால் பயனடைந்திருக்க கூடாது.
தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் 30 சதவீதம் பேர் எஸ்சி எஸ்டி பிரிவை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
மேலும் இந்த திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட தகுதிகளை பெற்றிருப்பின், தங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருந்தகத்திற்கு சென்று கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பம் அளித்து பயன்பெற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பம் ஆகஸ்ட் 23ம்தேதிக்குள் அளிக்க வேண்டும்.இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.