நாகர்கோவில் ஜூன் 1 : குமரி மாவட்டம் கண்ணுமாமூடு வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவதாக குமரி மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருநெல்வேலி சரக உணவு கடத்தல் பிரிவு டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன் மேற்பார்வையில் கன்னியாகுமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்ஐக்கள் சிவஞானபாண்டியன், துரை மற்றும் போலீசார் குமரி மாவட்ட எல்லையான கண்ணுமாமூடு பகுதியில் நேற்று வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினிலாரியை பிடித்து சோதனை நடத்தினர். அப்போது லாரியில் 3 டன் ரேஷன் அரிசி இருந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட சீதப்பாலை சேர்ந்த அனீஷ் (27)என்பவரை கைது செய்தனர். ரேஷன் அரிசியை கடத்துவதற்கு பயன்படுத்திய மினி லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
71