செய்முறைமுதலில் பாலை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அதில் 40
கிராம் சர்க்கரையை சேர்த்து கிளறவும். பின்னர் ஆற விடவும். இத்துடன்
முட்டை, ஜாதிக்காய், வெண்ணிலா சாரம் மூன்றையும் நன்கு கலக்கி ஆறிய பாலுடன்
சேர்க்க வேண்டும். மீதமுள்ள 20 கிராம் சர்க்கரையை வாணலியில் போட்டு மிதமான
சூட்டில் உருக்க வேண்டும். அது உருகும்போது ஒரு ஸ்பூன் தண்ணீர்
சேர்க்கவேண்டும். அதன் நிறம் காபி கலராக மாறும். அதனை பாத்திரத்தில்
ஊற்றவும். 2 நிமிடம் கழித்து ஆறிய பால் கலவையை அதன் மேல் ஊற்றி, பிளாஸ்டிக்
பேப்பரால் மூடவும். பின்னர் இட்லி பானையில் இதனை போட்டு 20 – 25 நிமிடம்
வேக விடவும். வெந்ததும் வெளியே எடுத்து பிளாஸ்டிக் பேப்பரை அகற்றவும். சூடு
ஆறிய பிறகு பிரிட்ஜில் 2 மணிநேரம் வைக்க வேண்டும். அப்புறம் எடுத்து
சாப்பிட்டு பாருங்க… சுவையான கேரமல் கஸ்டர்ட் ரெடி.
கேரமல் கஸ்டர்ட்
69
previous post