எப்படிச் செய்வது?நான்ஸ்டிக் கடாயில் நெய் 1 டேபிள்ஸ்பூன் ஊற்றி
சூடானதும் முந்திரி, காய்ந்த திராட்சையை வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.
அதே கடாயில் மீதியுள்ள நெய்யை ஊற்றி கேரட்டை வதக்கவும். சிறிது
வதங்கியதும் தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கி, பொடித்த கோவாவை சேர்த்து
மிதமான தீயில் கைவிடாமல் 5 நிமிடம் வதக்கவும். இதில் சர்க்கரை சேர்த்து
வதக்கவும். சர்க்கரை கரைந்து அனைத்தும் சுருண்டு வரும்பொழுது வறுத்த
முந்திரி, காய்ந்த திராட்சை கலந்து இறக்கவும். ஆறியதும் லட்டுகளாக பிடித்து
பிஸ்தா, பாதாம் சீவலால் அலங்கரித்து பரிமாறவும்.
கேரட் கோவா லட்டு
previous post