பாலக்கோடு, ஜூன் 19: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கல்கூடப்பட்டி தேசிய நெடுஞ்சாலையோரம், கர்நாடக பதிவெண் கொண்ட சொகுசு கார், கேட்பாரற்று நீண்ட நேரம் நின்று கொண்டிருப்பதாக, அப்பகுதியினர் நேற்று முன்தினம் இரவு பாலக்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சொகுசு காரை கைப்பற்றினர். காரின் கதவை திறந்து பார்த்த போது, அதில் ஒரு மூட்டையில் இரண்டரை கிலோ குட்கா பொருட்கள் இருந்தது. விசாரணையில், கர்நாடகா மாநிலம் பெங்களுருவிலிருந்து மூட்டை மூட்டையாக குட்கா பொருட்களை மர்ம நபர்கள் காரில் கடத்தி வந்துள்ளனர். கல்கூடப்பட்டி அருகே கார் பழுதானதால், வேறு வாகனத்தில் அவசர அவசரமாக குட்கா மூட்டைகளை மாற்றி எடுத்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து கார் மற்றும் குட்காவை போலீசார் பறிமுதல் செய்து, காரின் உரிமையாளர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேட்பாரற்று நின்ற காரில் குட்கா மீட்பு
0
previous post