திருச்செங்கோடு, செப்.3: திருச்செங்கோடு கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரியில், முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா கல்வி நிறுவனங்களின் தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்தது.
துணைத்தலைவர் சச்சின் முன்னிலை வகித்தார். கல்லூரியின் துணை முதல்வர் கார்த்திகேயன் வரவேற்றார். முதல்வர் கோபாலகிருஷ்ணன் கல்லூரியின் சாதனைகளை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு எடுத்து கூறினார். சிறப்பு விருந்தினர் வெள்ளைப்பாண்டி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து பல்வேறு கல்விச் சலுகை பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நூலகம் மற்றும் மாணவர் நலன் இயக்குனர் வெங்கடாசலம் நன்றி கூறினார். விழாவில், மோகன் உள்ளிட்ட கல்வி நிறுவன இயக்குனர்கள், டீன்கள், கல்லூரி இயக்குனர்கள், ஆசிரியர்கள் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்கள் 950 பேர், பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.
கேஎஸ்ஆர் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா
previous post