போச்சம்பள்ளி, பிப்.21: காவேரிப்பட்டணம் வட்டாரத்தில், கே.ஆர்.பி. அணை பாசன வசதியை நம்பி ஆயிரக்கான ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சுண்டேகுப்பம், மாரிசெட்டிஅள்ளி, டேம்ரோடு, திம்மாபுரம், மலையாண்டஅள்ளி, குண்டல்பட்டி, கால்வேஅள்ளி சுற்றுவட்டார கிராமங்களில், தற்போது நெல் வயல்களில் துத்தநாக சத்து பற்றாக்குறை அதிக அளவில் தென்படுவதால், நெற்பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறி வளர்ச்சி குன்றி காணப்படுகிறது. பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் கிருஷ்ணவேணி, உதவி பேராசிரியர் சத்தியமூர்த்தி, வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முனிகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து நெல் வயல்களில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
நெல் வயல்களில் துத்தநாக சத்து பற்றாக்குறை அதிக அளவில் தென்படுவதால், நெற்பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறி வளர்ச்சி குன்றியுள்ளது. இவற்றை நிவர்த்தி செய்ய, விவசாயிகள் ஏக்கருக்கு 10 கிலோ என்ற அளவில் துத்தநாக சல்பேட் மணலுடன் கலந்து, வயல்களில் இடுமாறு அறிவுறுத்தப்பட்டது. அல்லது நடவு வய ல்களில் நீரில் கரையும் துத்தநாக சல்பேட் உரத்தினை ஒரு லிட்டருக்கு, ஒரு கிராம் என்ற அளவில் கலந்து, வயலில் தெளித்து துத்தநாக கல்பேட் பற்றாக் குறையை நிவர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். இந்த ஆய்வின் போது, உதவி வேளா ண்மை அலுவலர்கள் நாகராஜ், பாக்கியராஜ், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.