ஓசூர், ஜூன் 26: ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 701 கன அடியாக அதிகரித்துள்ளது. கெலவரப்பள்ளி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு 981 கனஅடி நீர் வந்த நிலையில், நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், அணைக்கு வரும் நீர்வரத்தும் படிப்படியாக குறையத்தொடங்கிது. இந்நிலையில் மீண்டும் கர்நாடக மாநிலத்தில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, நேற்று முன்தினம் 461 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 701 கன அடியாக அதிகரித்தது. அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகிறது. தற்போது அணையில் 44.28 அடியில் 40.67 அடிக்கு நீர் இருப்பு உள்ளது.
கெலவரப்பள்ளிக்கு நீர்வரத்து 701 கனஅடி
0
previous post