திண்டிவனம், ஜூலை 5: திண்டிவனம் அடுத்த கோனேரிகுப்பத்தில் இயங்கிவரும் தனியார் கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் தேனீக்கள் பெரிய அளவில் கூடு கட்டி இருந்தது. அதை அகற்ற நேற்று முன்தினம் மாலை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கெமிக்கல் ஸ்ப்ரே மூலம் தேன் கூட்டை அழித்துள்ளனர். அப்போது கீழே விழுந்து கிடந்த தேன் அடையை கல்லூரி விடுதி மாணவர்கள் எடுத்து சாப்பிட்டு உள்ளனர். இதையடுத்து நேற்று காலை திடீரென 10க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட ஒவ்வாமை ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு பின்னர் அனைவரையும் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் தேன் அடையை அங்கிருந்து அப்புறப்படுத்தாமல் இருந்ததே மாணவர்கள் வாந்தி மயக்கத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
கெமிக்கல் ஸ்ப்ரே மூலம் அழிக்கப்பட்ட தேன் கூடு தனியார் கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு வாந்தி, மயக்கம்
0