பண்ருட்டி, ஆக. 22: பண்ருட்டியை அடுத்த புதுப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் போலீசார் காமாட்சிபேட்டை கெடிலம் ஆற்று பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்தப்படுவது தெரியவந்தது.இதையடுத்து அங்கு சென்ற போது, போலீசாரை பார்த்ததும் மணலுடன் மாட்டு வண்டியை அங்கேயே நிறுத்தி விட்டு காமாட்சிபேட்டையை சேர்ந்த மதுரை(65) என்பவர் தப்பி ஓடினார். பின்னர் போலீசார் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து, வழக்கு பதிந்து தப்பி ஓடிய மதுரையை தேடி வருகின்றனர்.
கெடிலம் ஆற்றில் மணல் கடத்தல்
previous post