கெங்கவல்லி, ஜூன் 27: கெங்கவல்லி சுற்றுவட்டாரத்தில், மதுபானங்கள் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வந்த புகார்களின் பேரில், ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமார் தலைமையில் எஸ்ஐ கணேஷ்குமார் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது, ஒதியத்தூர் பகுதியை சேர்ந்த உமா (33), ஆணையாம்பட்டியை பாஞ்சாலை (50), ராஜேஸ்வரி (41) ஆகியோர் வீடுகளில் சோதனை செய்தனர். இதில், மதுபானங்கள் பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் உமா, பாஞ்சாலை, ராஜேஸ்வரி ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்த மதுபானங்களை பறிமுதல் செய்தனர்.