மன்னார்குடி, மே 20: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அடுத்த வெள்ளக்குடி காலனி தெருவை சேர்ந்தவர் ராசு (62). இவருக்கு சொந்தமான ஆடு ஒன்று வெள் ளக் குடி பிடாரி கோயில் அருகே மேய்ந்து கொண்டிருந்தது. அப் போது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் ஆட்டை திருடி சென்று விட்டதாக கூத்தாநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இப்புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வெர்ஜினியா உத்தரவின் பேரில் எஸ்ஐ ரவிச்சந்திரன் உள்ளிட்ட போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந் தனர். இது தொடர்பாக கொரடாச்சேரி பாலாக்குடி புதுதெருவை சேர்ந்த அஜித் குமார் (24), கொரடாச்சேரி தெற்குமாங்குடியை சேர்ந்த காசிநாதன் (44) ஆகிய இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து திருடப்பட்ட ஆடு மற் றும் திருட்டுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.