உடுமலை, ஜூன் 10: உடுமலை அருகே உள்ள தும்பலப் பட்டி வழியாக பழனி, ஆனைமலை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்லும் ரோடு உள்ளது. திருமூர்த்தி அணையில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் தளி. ஜல்லிபட்டி குறிச்சி கோட்டை, குமரலிங்கம். கொழுமம், மடத்துக்குளம் உள்ளிட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. குடிநீர் திட்ட குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் விரையம் ஆகிறது. இதனால் தும்பலப்பட்டி மேட்டுப்பகுதியில் சாலையோரம் குடிநீர் விரயமாகி குளம் போல் தேங்கி நிற்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக சாலையோரம் பெருகி நிற்கிறது.குழாயில் ஏற்பட்ட உடைப்பு மற்றும் கசிவு குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை ஊராட்சி நிர்வாகம் தகவல் சொல்லியும் கண்டு கொள்வதில்லை. தொடர்ந்து தினமும் பல்லாயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் விரயம் ஆவது இல்லாமல் தண்ணீர் தேங்கி அதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.