மதுரை, நவ. 17: மதுரை மாவட்டத்தில் 71வது அனைத்திந்தியக் கூட்டுறவு வாரவிழாவை முன்னிட்டு, கடந்த 15ம் தேதி காலை 10 மணிக்கு பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் பொது மருத்துவ முகாம், கண் மருத்துவ முகாம் ரத்ததான முகாம் நடைபெற்றது. இவ்விழாவில் கூட்டுறவு வாரவிழா குழு தலைவரும், மதுரை மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் சி.குருமூர்த்தி தலைமையேற்றார். மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் மற்றும் செயலாட்சியர் க.வாஞ்சிநான், பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் இணைப்பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சு.மனோகரன் முகாம்களை துவக்கி வைத்தனர்.
மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் துணைப்பதிவாளர் மற்றும் முதன்மை வருவாய் அலுவலர் மு.அமிரதா, பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய துணைப்பதிவாளர் மற்றும் முதல்வர் கே.வசந்தி, துணைப்பதிவாளர் (பயிற்சி) வை.சுரேஷ், மதுரை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் ம.தீனதயாளன் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.