சிவகங்கை, ஜூன் 25: சிவகங்கை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.ராஜேந்திர பிரசாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: சிவகங்கை வட்டம் காஞ்சிரங்காலில் கூட்டுறவு மேலாண்மை நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 2025-26ம் ஆண்டு முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான விண்ணப்ப தேதி 20.7.2025 மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக www.tncu.tn.gov.in என்ற இணையதள முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் ரூ.100ஐ இணையவழியில் செலுத்த வேண்டும். பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி அல்லது பட்டம், பட்டயப்பயிற்சி முடித்தவர்கள் 1.7.2025 அன்று 17 வயது நிறைவடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. இப்பயிற்சியில் சேருபவர்களின் எஸ்/எஸ்டி, பிசி, எம்பிசி மற்றும் டிஎன்சி தகுதியுள்ள அனைவருக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படும். இப்பயிற்சி 1.8.2025 முதல் தொடங்க உள்ளது. பயிற்சி தொடர்பான விபரங்களை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் www.tncu.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 04575-243995 என தெரிவித்துள்ளார்.