துறையூர், செப்.13: திருச்சி மாவட்டம் துறையூர் தெப்பக்குளம் அருகே பல ஆண்டுகளாக கூட்டுறவு கிராம கடன் சங்கம் வங்கி தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தற்பொழுது பெரம்பலூர் சாலை சிலோன் ஆபீஸ் அருகில் கூட்டுறவு வளர்ச்சி நிதியின்கீழ் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கூட்டுறவு கிராம கடன் சங்கம் புதிய கட்டிடத்தினை துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின் குமார் திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக் கொண்டு வந்தார்.
இவ்விழாவில் நகரச் செயலாளர் மெடிக்கல் முரளி, திருச்சி மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு கஸ்டம்ஸ் மகாலிங்கம், நகர அவைத் தலைவர் தர்மலிங்கம், முசிறி சரக கூட்டுறவு துணைப்பதிவாளர் பானுமதி, கூட்டுறவு சார்பதிவாளர் கள அலுவலர் தமிழ்ச்செல்வன், கூட்டுறவு சார்பதிவாளர்கள் வினோத்குமார், குணசேகரன், தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் கிட்டப்பா, துறையூர் நகர் மன்ற உறுப்பினர்கள் சுதாகர், கார்த்திகேயன், வீர மணிகண்டன், அம்மன் பாபு, முத்து மாங்கனி, மாவட்ட பிரதிநிதி மதியழகன் மற்றும் வார்டு பிரதிநிதிகள், மாவட்ட பொறுப்பாளர்கள், கூட்டுறவு சங்க செயலாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.