கோவை: கோவை மாவட்ட பள்ளிக்கல்வி துறை சார்பில் 64 வது குடியரசு தின விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. கிழக்கு குறுமைய அளவில் நடந்த பல்வேறு விளையாட்டு போட்டிகளில் இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளையும், சான்றிதழ்களையும் பெற்றனர். 14, 17, 19 வயது பிரிவுகளில் ஹாக்கி, கால்பந்து, மேஜைப்பந்து, இறகுப்பந்து, சதுரங்கம், சிலம்பம், நீச்சல், கபடி, கராத்தே போன்ற போட்டிகளில் முதல் மற்றும் 2ம் பரிசுகளை வென்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலர் டாக்டர் பிரியா, பள்ளி முதல்வர் செண்பகவல்லி, உடற்கல்வி இயக்குனர் சாலமோன் ஆகியோர் வாழ்த்தினர்.