பாலக்காடு, ஜூலை 7: திருச்சூர் அருகே மாணவிகள் கூட்டத்திற்குள் வேன் புகுந்து பிளஸ்-2 மாணவி பலியானார். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் புதுக்காடு அருகே வடக்கேத்தொரவு பகுதியைச் சேர்ந்த மோகன்-ரமா தம்பதி. இவர்களது மகள் வைஷ்ணா (17). இவர் புதுக்காடு நந்திக்கரை அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் பள்ளிக்கு செல்வதற்கு தனியார் பஸ்சில் நந்திக்கராவில் உள்ள பள்ளி பஸ் நிறுத்தத்தில் இறங்கியுள்ளார்.
அங்கிருந்து மற்ற மாணவிகளுடன் திருச்சூர்- அங்கமாலி சாலையை கடந்து முன்றுள்ளார். அப்போது திருச்சூரிலிருந்து கோட்டயம் நோக்கி வந்த பிக்கப் வேன் மாணவிகள் மீது மோதியது. இந்த விபத்தில் வைஷ்ணா உட்பட சக மாணவிகள் காயமடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு புதுக்காடு தாலுகா அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் மாணவி வைஷ்ணா பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற மாணவிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.