ஊத்தங்கரை, ஜூன் 17: கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை போலீஸ் எஸ்எஸ்ஐ சின்னசாமி மற்றும் போலீசார், குப்பநத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம்(39) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்களை கைப்பற்றினர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடுதல் விலைக்கு மது விற்றவர் கைது
0