சிவகங்கை, ஆக. 4: சிவகங்கை நகராட்சி நிர்வாகம் சார்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:சிவகங்கை நகராட்சி பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 100 கிலோவிற்கு கூடுதலாக திடக்கழிவுகள் உருவாக்கக்கூடிய கட்டிடங்களை பயன்படுத்தும் மத்திய, மாநில அரசுத்துறைகள், நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், குடியிருப்புகள் (300க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட வளாகம்), மருத்துவமனைகள், சிகிச்சை நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், இதர கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள், வர்த்தக மால்கள், வியாபார நிறுவனங்கள் உள்ளிட்டோர் நகராட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்து தங்கள் வளாகத்தில் உருவாகும் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு ஏற்ப உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது திடக்கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக கழிவுகள் உருவாக்கும் நிறுவனங்கள் மறுசுழற்சி வசதி ஏற்படுத்த உத்தரவு
previous post