கூடலூர், ஜூன் 26: கூடலூர் பகுதிகளில் பெரியாறு பாசனத்தில் இருபோக நெல் விவசாயம் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் 1ம் தேதி முதல, கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் முதல் போக விவசாயத்திற்காக பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து கூடலூர், ஆங்கூர் பாளையம், குள்ளப்ப கவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, தாமரைக்குளம், வெட்டுக்காடு, ஒட்டன் குளம், ஜம்போடை, சட்ரஸ் உள்ளிட்ட பகுதிகளில் முதல் போக நெல் விவசாயத்திற்காக வயல்களில் உழவுப் பணிகள் நடைபெற்று, நெல் நாற்றுகள் பாவப்பட்டும் ,சில வயல்களில் நடவுப் பணிகளும் துவங்கியுள்ளன.