கூடலூர், ஜூன் 12: கூடலூர் நகராட்சி பகுதியில் நகராட்சி நிர்வாக மதுரை மண்டல இயக்குனர் முஜிபுர் ரஹ்மான் நேற்று ஆய்வு மேற்கொண்டார். கூடலூர் நகராட்சி பகுதியில் புதிய பேருந்து நிலையம், வாரச்சந்தை கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் நகராட்சி நிர்வாக மதுரை மண்டல இயக்குநர் முஜிபுர் ரஹ்மான் நேற்று கூடலூர் நகராட்சி பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம், வார சந்தை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் பணிகளை துரிதமாக முடிக்குமாறு நகராட்சி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். மேலும் கூடலூரில் உள்ள நுண் உர செயலாக்க மையங்களில் ஆய்வு மேற்கொண்டு தினசரி சேகரிக்கப்படும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை சிறந்த முறையில் செயலாக்கம் செய்ய ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் காஞ்சனா, பொறியாளர் பன்னீர்செல்வம், சுகாதார ஆய்வாளர் விவேக் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.