கூடலூர், ஜூன் 30: கூடலூர் நகர திமுக இளைஞரணி அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நகர அமைப்பாளர் விஜயகுமார் தலைமையில் நகர செயலாளர் இளஞ்செழியன் முன்னிலையில் நேற்று நடந்தது. இதில் இன்று 30ம் தேதி மதியம் கூடலூர் நகர இளைஞர் அணி சார்பில் கூடலூர் காந்தி சிலை அருகில் நடைபெறும் கலைஞர் பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டத்தினை மிக சிறப்பாக நடத்த தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் நகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் நியாஸ், நிர்மல், செல்லதுரை ஆகியோர் கலந்துகொண்டனர். இளைஞர் அணி துணை அமைப்பாளர் அபுதாஹீர் நன்றி கூறினார்.