கூடலூர், மே 4: கூடலூர் ரெட் லைன்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டிகள் துப்பு குட்டிபேட்டை ஐடியல் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக கூடலூர் எம்எல்ஏ பொன் ஜெயசீலன், டிஎஸ்பி செல்வராஜ் மற்றும் திமுக மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு வீரர்களை அறிமுகப்படுத்தி போட்டிகளை துவக்கி வைத்தனர். போட்டிகளில் மொத்தம் 23 அணிகள் பங்கேற்றன. நிகழ்ச்சிகளுக்கு ஐடியல் பள்ளி தாளாளர் சுலைமான் தலைமை வகித்தார்.
மாநில அளவில் 4 பெண்கள் அணி மற்றும் 7 ஆண்கள் அணிகளும், மாவட்ட அளவில் 12 அணிகளும் போட்டிகளில் பங்கேற்றன. மாநில அளவிலான போட்டிகளில் மயிலாடுதுறையைச் சேர்ந்த டேஞ்சர்பாய்ஸ் அணி முதல் இடத்தையும் பெங்களூர் அணி 2ம் இடத்தையும் பெற்றன. மாவட்ட அளவிலான போட்டிகளில் சென்னை அணி முதலாம் இடத்தையும் சேலம் அணி 2ம் இடத்தையும் பெற்றது. போட்டிகளில் பங்கு பெற்று முதலிடம் பெற்ற அணிக்காக முன்னாள் எம்.பி. ராசா சார்பில் வழங்கப்பட்ட ரொக்க பரிசு ரூபாய் 60 ஆயிரத்தை நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திமுக மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஸ்வரன் வழங்கி கேடயங்களையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கூடலூர் நகர செயலாளர் இளஞ்செழியன், மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற தலைவர் வழக்கறிஞர் ஸ்ரீஜேஷ், நகர துணை செயலாளர் ஜபருல்லா மற்றும் இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை ரெட் லைன்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் சிவா, பென்னி, சக்தி, ஆனந்த், செங்குட்டுவன், கேஜே, ஜோஸ், ராஜன், வர்கீஸ், ஜம்பு ஆகியோர் அடங்கிய குழுவினர் செய்திருந்தனர்.