கூடங்குளம், ஜூலை 1: நெல்லை மாவட்டம் கூடங்குளம் கிழக்கு பஜார், மேற்கு பஜார் பகுதிகளில் தலா ஒரு உயர் கோபுர சோலார் மின்விளக்கு அமைத்துத்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கடந்த சில மாதங்களுக்கு கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக்கொண்ட அப்போதைய எம்.பி. ஞானதிரவியம், நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இதற்காக ரூ.15.30 லட்சம் ஒதுக்கீடு செய்தார். மேலும் இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு அடிக்கல்நாட்டி இதற்கான பணியைத் துவக்கிவைத்தார். தற்போது இப்பபணி நிறைவடைந்த நிலையில் புதிய உயர் கோபுர சோலார் மின் விளக்குகளின் சேவையின் துவக்கவிழா நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற நெல்லை தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், உயர் கோபுர சோலார் மின்விளக்குகளை திறந்துவைத்து அதன்சேவையைத் துவக்கிவைத்தார். நிகழ்வில் திமுக ராதாபுரம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் எரிக் ஜூடு பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் ஜான்ஸ் ரூபா, ஒன்றிய கவுன்சிலர்கள் நடராஜன், முருகன் ராதாபுரம் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் தனபால், சந்திரசேகர், கண்ணன், சக்திவேல் தாமஸ் ஜெயக்குமார் மற்றும் தொழிலதிபர் ரத்தினசாமி, ஊர் மக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
கூடங்குளத்தில் உயர் கோபுர சோலார் மின் விளக்கு சேவை
0