மார்த்தாண்டம், ஜூலை 31: குழித்துறையில் 99 வது வாவுபலி பொருட்காட்சி நடந்து வருகிறது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளை ஊக்குவிப்பதற்காக தினசரி மாலை கபடி போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் மொத்தம் 61 அணிகள் பங்கேற்கிறது. நேற்று முன்தினம் 4 போட்டிகள் நடந்தது. இதில் வெட்டுவெந்நி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணியும், மண்டைக்காடு தேவசம் போர்டு மேல்நிலை நிலைப் பள்ளி அணியும் மோதின. இதில் மண்டைக்காடு பள்ளி அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து கருங்கல் அல்போன்சா கலை அறிவியல் கல்லூரி அணியும், அம்மாண்டிவிளை புனித ஜாண்ஸ் கல்லூரி அணியும் மோதின. இதில் புனித ஜாண்ஸ் கல்லூரி அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி உயர்நிலைப் பள்ளி அணியும், மூலச்சல் அரசு உயர்நிலைப் பள்ளி அணியும் மோதின. இதில் கூட்டாலுமூடு பள்ளி அணி வெற்றி பெற்றது. பெண்கள் கபடி போட்டியில் குழித்துறை தேவி குமாரி பெண்கள்கல்லூரி அணியும், லட்சுமிபுரம் கல்லூரி அணியும் மோதியது. இதில் லட்சுமிபுரம் கல்லூரி அணி வெற்றி பெற்றது. இந்த போட்டிகளை நேற்று தாரகை கத்பர்ட் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். குழித்துறை நகராட்சி சேர்மன் பொன்ஆசை தம்பி, சுகாதார அதிகாரி ராஜேஷ் குமார், கவுன்சிலர்கள் சாபு, ரோஸ்லெட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குழித்துறை வாவுபலி பொருட்காட்சி திடலில் கபடி போட்டி தாரகை கத்பர்ட் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
96
previous post