மார்த்தாண்டம், மார்ச் 12 : நாடாளுமன்றத்தில் தமிழக மக்களை இழிவுபடுத்தி பேசியதாக, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவ படத்தை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் குழித்துறை சந்திப்பில் நடந்தது. குழித்துறை நகர திமுக சார்பில் நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு குழித்துறை நகர செயலாளர் வினுகுமார் தலைமை வகித்தார். மேல்புறம் வடக்கு ஒன்றிய செயலாளர் சைனி கார்ட்டன், கிறிஸ்டோபர், அப்துல் ரஹீம், ஆகியோர் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் திமுக நிர்வாகிகள் அசோக் குமார், அரவிந்த், ஜோசப் சுகி, ஜெயஹர்லால், ஜெயமெரின், ராஜசெல்வன், யுவானியஸ் செல்வம், ராஜன், நிர்மல்குமார், ஜஸ்டின் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குழித்துறை நகர திமுக சார்பில் ஒன்றிய அமைச்சர் உருவபடம் எரிப்பு
0
previous post