மார்த்தாண்டம், ஆக. 31: குழித்துறையில் தனியார் தோட்டம் வழியாக வடிகால் பாய்கிறது. இதனால் இந்த பகுதி துர்நாற்றம் வீசுகிறது. குழித்துறை ஜங்ஷனில் மெயின் ரோட்டின் அடிப்பகுதி வழியாக வடிகால் பாய்ந்து செங்கன்மூலை ரோடு ஓரம் வழியாக வந்து, தோட்டங்களின் ஓரம் வழியாக பாய்ந்து கல்பாலத்தடி சானலில் சென்றடைகிறது. ஆனால் செங்கன்மூலை ரோடு பகுதியிலிருந்து கல்பாலத்தடி சானல் வரை இந்த வடிகால் ஆக்ரமிக்கப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் சரியாக பாய்ந்தோடாமல் தோட்டங்கள் வழியாக பாய்கிறது. இதனால் இந்த பகுதியில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்களின் தொல்லையும் அதிகரித்து உள்ளது. எனவே இந்தப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வடிகாலை சீரமைக்க வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் விரும்புகின்றனர்.
குழித்துறையில் வடிகால் ஆக்ரமிப்பால் தனியார் தோட்டங்களில் பாயும் கழிவுநீர்
previous post