சேலம், ஆக.29: சேலத்தில் 17 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், வாலிபர் மீது போக்சோ வழக்கு பாய்ந்தது. சேலம் பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த 17வயது சிறுமி, கடந்த 26ம்தேதி சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். மறுநாள் அச்சிறுமி ஆண் குழந்தை பெற்றெடுத்தார். இதுகுறித்து மருத்துவமனையில் இருந்து சூரமங்கலம் மகளிர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில், அச்சிறுமியை அவரது தாய் மாமனான கார்த்தி(26) என்பவர் காதலித்து திருமணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து வாலிபர் கார்த்தி மீது போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தை பெற்ற 17 வயது சிறுமி
previous post