Tuesday, July 23, 2024
Home » குழந்தை நரம்பியல் மருத்துவ கருத்தரங்கம்

குழந்தை நரம்பியல் மருத்துவ கருத்தரங்கம்

by Ranjith

மதுரை, ஜூலை 8: மதுரையில் அப்போலோ குழந்தைகள் மற்றும் பெண்கள் நல மருத்துவமனை மற்றும் மதுரை இந்தியன் அகாடமி ஆப் பீடியாட்ரிக்சுடன் இணைந்து நடத்திய குழந்தை நரம்பியல் மருத்துவ கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் குழந்தைகள் நல மருத்துவர்கள், நரம்பியல் சிகிச்சை நிபுணர்கள், தீவிர சிகிச்சை நிபுணர்கள், பொது மருத்துவர்கள் மற்றும் மருத்துவ முதுகலை பட்டதாரிகள் பலர் கலந்து கொண்டனர். 9வது ஆண்டு குழந்தைகள் நல மருத்துவ கருத்தரங்கமானது குழந்தை நரம்பியல் என்ற தலைப்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அப்போலோ மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி பி.நீலகண்ணன் வரவேற்புரையாற்றினார். அதைத் தொடர்ந்து மதுரை இந்தியன் அகாடமி ஆப் பீடியாட்ரிக் தலைவர் டாக்டர்.ஜவஹர் ஆறுமுகம் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வில் குழந்தை நல மருத்துவத்தில் தனது சிறந்த பங்களிப்பிற்காக டாக்டர்.ஜி.பாஸ்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த கருத்தரங்கத்தை மதுரை அப்போலோ பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையின் மூத்த குழந்தைகள் நல சிகிச்சை நிபுணர் டாக்டர்.முருகன் ஜெயராமன் தலைமை ஏற்று நடத்தினார்.

You may also like

Leave a Comment

4 + eighteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi