Saturday, March 15, 2025
Home » குழந்தை இல்லை கவலை இனியில்லை!

குழந்தை இல்லை கவலை இனியில்லை!

by kannappan

நன்றி குங்குமம் தோழி கடந்த 20 வருடங்களாக புரட்சிகரமாக தொழில்நுட்பங்கள் குழந்தையின்மைக்காக பல சிகிச்சைமுறைகளை செய்து வருகிறது. அதன் காரணமாக குழந்தை பெற முடியாத நிலையில் இருக்கும் தம்பதிகளுக்கு இன்றைய காலக்கட்டத்தில் பல சிகிச்சை முறைகள் நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது. இந்த சிகிச்சை முறைகள் அறிவியல் சார்ந்தது மட்டும் இல்லாமல் யாருக்கு என்ன பிரச்னை என்று துல்லியமாக கணக்கிட்டு அதற்கான சிகிச்சையை அளிக்க முடியும்.மேலும் குழந்தையின்மையால் ஏற்படும் பல தடைகளை இப்போதுள்ள மருத்துவ சிகிச்சை முறைகள் மூலம் உடைத்தெறிந்து பெண்களின் வாழ்க்கையில் சந்தோஷத்தை கொடுக்க முடியும். உதாரணத்திற்கு கர்ப்பப்பை இல்லாத ஒரு பெண்ணால் கூட குழந்தையை பெற்றுக் கொள்ள முடியும் இன்றைய மருத்துவ வளர்ச்சியால் என்கிறார் டாக்டர் துருஷா.இவர் கைனெக்ேவர்ல்ட் ைமயத்தின் இனப்பெருக்கம் மற்றும் பெண்கள் சுகாதார குழுவின் இயக்குனர். மேலும் மும்பையில் உள்ள பல மருத்துவமனைகளில் மகப்பேறு ஆலோசகராகவும் உள்ளார். இவர் குழந்தையின்மைக்கான பல்வேறு சிகிச்சை முறைகளை பற்றி விளக்கம் அளிக்கிறார்.கணவன்-மனைவி இருவரும் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது, ஆயிரக்கணக்கான விந்தணுக்கள் பெண்ணின் யோனியை வந்தடையும். அங்கிருந்து சுறுசுறுப்பான விந்துக்கள் மட்டும் ஃபலோபியன் குழாய் வழியாக கருமுட்டையிடம் சேரும். இங்குதான் கருத்தரித்தல் முறை துவங்குகிறது. நன்கு வளர்ந்த கருமுட்டை கருவாகி கர்ப்பப்பையில் அழகான குழந்தையாக மாறுகிறது. ஒரு அழகான ஆரோக்கியமான குழந்தை உருவாவதற்கு  ஆரோக்கியமான கருமுட்டை மற்றும் விந்தணு நன்கு இயங்கக்கூடிய கருப்பை அவசியம்.இன்றைய காலக்கட்டத்தில் ெபண்களும் வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். வேலைக்கு செல்வதால் தாய்மை அடையும் படலத்தை குறைந்தபட்சம் 35 வயது வரை தள்ளிப்போடுகிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் ‘‘வேலையில் ஒரு நிலையை அடைந்த பிறகு தான் குழந்தை பற்றி யோசிக்க வேண்டும்’’ என்பது.பெண்களின் கருப்பையில் ஒரு குறிப்பிட்ட அளவு கருமுட்டைகள் தான் இருக்கும். அவர்கள் வயதிற்கு வந்த நாள் முதல் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் ஏற்படும் போது முட்டைகள் வெளியேறும். இதனால் கருமுட்டைகள் ஒவ்வொன்றாக குறைந்து வரும்.முட்டைகள் முற்றிலும் இல்லாமல் போகும் போதுதான் பெண்கள் ெமனோபாஸ் என்ற நிலையை அடைகிறார்கள். இன்றைய தலைமுறை பெண்கள் 45 வயதிலேயே மெனோபாஸ் நிலையை சந்திக்கிறார்கள். அதனாலேயே 35 வயதிற்குள் இவர்கள் குழந்தையை பெற்றுக்கொள்வதை பற்றி யோசிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.அது மட்டும் இல்லாமல் சில காரணங்களாலும் இவர்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். மதுப் பழக்கம் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தாலும் அது கருமுட்டையை பாதிக்கும். சில மருத்துவ பிரச்னை காரணமாக கர்ப்பப்பையில் சிகிச்சை மேற்கொண்டு இருந்தாலும் அவர்களுக்கும் குழந்தை பிறப்பதில் பாதிப்பு ஏற்படும். ஆனால் வளர்ந்து வரும் மருத்துவ துறை காரணமாக இது போன்ற பிரச்னை இருந்தாலும் அதற்கான தீர்வினை அளிக்க முடியும்.கருமுட்டைகளை பதப்படுத்துதல்: ஒரு பெண் தன்னுடைய 18 வயதினை கடந்த பிறகு அவளுடைய கருமுட்டையை எடுத்து பதப்படுத்தி வைத்துக் கொள்ளலாம். இதனால் இளம் கருமுட்டையை அவர்கள் தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு வேளை கருமுட்டையை பதப்படுத்தாமல் இருந்திருந்து, அவர்களால் குழுந்தை பெற முடியாத பட்சத்தில் அவர்கள் கருமுட்டையை தானமாக பெற்று குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.அவ்வாறு பெறும் போது, தானம் அளிப்பவர்களுக்கு ஏதேனும் தொற்று, நீரிழிவு அல்லது தைராய்டு பிரச்னை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் விட டேனரின் கருமுட்டை இவர்களுக்கு ஏற்றுக் கொள்ளும்படியாக இருக்க வேண்டும். தானமாக பெற்ற கருமுட்டையில் கணவரின் விந்தணுவுடன் இணைத்து மனைவியின் கருப்பையில் செலுத்த வேண்டும். கருமுட்டை இல்லாத பெண்களுக்கு இந்த வகையான செயற்கை கருத்தரிப்பு நல்ல பலனை அளிக்கும்.கருத்தரிக்காமல் போவதற்கு பெண்கள் மட்டுமே முழுக்காரணம் என்று சொல்லிவிட முடியாது. ஆண்களுக்கும் உடல் ரீதியாக பிரச்னை ஏற்படும். அவர்களுக்கு விந்தணுக்கள் குறைவாக இருக்கலாம் அல்லது அவை தரமற்றவைகளாக இருக்கலாம். இந்தப் பிரச்னைக்கும் தீர்வுள்ளது.TESA (Testicular Sperm Aspiration), இந்த சிகிச்சை முறையில் ேநரடியாக விரையில் இருந்து விந்தணுக்களை எடுத்து அதனை கரு முட்டைக்குள் செலுத்த வேண்டும். இந்த சிகிச்சை முறையை விந்தணுக்கள் குறைவாக உள்ளவர்களுக்கும் கடைப்பிடிக்கலாம். கருமுட்டை தானம் போல விந்தணு தானமும் உள்ளது. இதன் மூலம் விந்தணுவை நேரடியாக கருப்பையில் செலத்தலாம். இந்த சிகிச்சைக்கு Intra Uterine Insemination (IUI) என்று பெயர்.சில சமயம் பிறக்கும் போதே கருப்பை இல்லாமல் பிறக்க வாய்ப்பு உள்ளது. அல்லது சில காரணங்களால் கருப்பையை அகற்றும் நிலை ஏற்படும். கர்ப்பப்பை மட்டும் தான் இருக்காது. ஆனால் இவர்களுக்கு கருமுட்டைகள் இருக்கும். அந்த நிலையில் வாடகைத் தாய் முறையை கடைப்பிடிக்கலாம். அதாவது பெண்ணுடைய கருமுட்டையுடன் கணவரின் விந்தணுவை இணைத்து வேறொரு பெண்ணுடைய (வாடகைத்தாய்) கர்ப்பப்பையில் வைத்து அதை சிசுவாக வளர்க்கலாம். வாடகைத்தாயா மாறும் ெபண்களுக்கும் பல ஆய்வுகளை செய்ய வேண்டும். அதன் மூலம் அவர்கள் மூலமாக பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.தற்போது வௌிநாட்டில் சுமார் பத்து பெண்களுக்கு கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அதன் பிறகு அவர்கள் குழந்தையும்பெற்றுள்ளனர். ஆனால் இந்த சிகிச்சை முறை முழுமையாக உலகம் முழுதும் வர குறைந்தபட்சம் பத்தாண்டுகள் ஆகும். பெண்ணுடைய கருமுட்டையை பதப்படுத்துவது போல் ஆண்களின் விந்தணுக்களையும் பதப்படுத்தலாம். கணவன் வெளிநாட்டிலோ அல்லது கப்பலிலோ வேலை பார்த்தால், கணவரின் பதப்படுத்தப்பட்ட விந்தணுக்களை ெகாண்டு பெண் கருத்தரிக்கலாம். நினைக்கும் போது செயற்கை முறையில் உள் செலுத்தி குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.இன்றைய நிலையில் குழந்தை பேறு இல்லை என்று எந்த பெண்ணும் வருத்தப்பட தேவையில்லை. முறையாக ஆலோசனை மற்றும் மருத்துவ உதவியுடன் எந்த நிலையிலும் ஒரு பெண்ணால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்.குழந்தை இல்லை என்று மற்றவர்களின் கேலி சொல்லுக்கோ அல்லது அவதூறு வார்த்தைகளுக்கோ இனி ஆளாக வேண்டாம். அதே சமயம் இது ேபான்ற மருத்துவ முறைகளை கையாளும் போது, அந்தந்த மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கவனமாகவும் அதே சமயம் மிகவும் பாதுகாப்பான மற்றும் சுகாதார முறையில் சிகிச்சை முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்’’ என்றார் டாக்டர் துருஷா.ஷம்ரிதி

You may also like

Leave a Comment

3 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi