ஈரோடு, மே 24: ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம், காட்டு வீதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி சுஜாதா (32). இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.இந்த நிலையில் மகேந்திரன் அடிக்கடி மதுகுடித்து விட்டு வந்து, மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.கடந்த 20ம் தேதி இரவும், கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சுஜாதா, குழந்தையுடன் வீட்டைவிட்டு வெளியில் சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் சுஜாதாவும், குழந்தையும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, நேற்று முன்தினம் சுஜாதாவின் தாயார் யசோதம்மாள் அளித்த புகாரின் பேரில், பங்களாபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையுடன் மாயமான சுஜாதாவை தேடி வருகின்றனர்.