மதுரை: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம், ஆறு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியினை மேம்படுத்தும் விதமாக மாவட்டத்தில் செயல்படும் 2,001 குழந்தைகள் மையங்களில் சத்துமாவு, ஊட்டச்சத்துடன் கூடிய கலவை உணவு மற்றும் முன்பருவக் கல்வி போன்றவை வழங்கப்படுகிறது.
2 முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இம்மையத்தில் முறைசாரா முன்பருவக் கல்வி, செய்கைப் பாடல், கதை, விளையாட்டுக் கல்வி உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதன்படி தற்போது அங்கன்வாடி பணியாளர்கள் வீடுகள் தோறும் இம்மையங்களில் குழந்தைகள் சேர்க்கை பணிகளை மேற்கொண்டுள்ளனர். எனவே, பெற்றோர்கள் தங்களத 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை ஜூன் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் சேர்த்திட வேண்டும். இத்தகவலை கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.