சிவகங்கை, ஆக.1: திருப்புவனம் பேரூராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி மன்ற தலைவர் சேங்கைமாறன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் தனுஷ்கோடி முன்னிலை வைத்தார். அலுவலர் நாகராஜன் வரவேற்றார். குழந்தைகள் கடத்தல், குழந்தை தொழிலாளர், குழந்தை திருமணம் தடுத்தல் மற்றும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புதல் குறித்த விழிப்புணர்வு குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சமூக நலத்துறை சார்பில் அலுவலர் சத்தியமூர்த்தி, திருப்புவனம் அரசு பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் கற்பகவள்ளி, கிராம அலுவலர்கள் ஜெயக்குமார், கருப்புசாமி, பேரூராட்சி துணைத் தலைவர் ரகமத்துல்லாகான், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பள்ளி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.
குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
46
previous post