சிவகங்கை, நவ.26: சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், குழந்தைகளுக்கான குழந்தை நட்பு சட்ட சேவைகள் திட்டம் குறித்த பயிற்சி நடைபெற்றது. முதன்மை மாவட்ட நீதிபதி(பொ) கோகுல்முருகன் தொடங்கி வைத்தார். வழக்கறிஞர்கள், சட்டம் சார்ந்த தன்னார்வலர்களுக்கு இப்பயிற்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பசும்பொன் சண்முகையா, மாவட்ட நீதிபதி(ஓய்வு) இளங்கோ, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி சுப்பையா ஆகியோர் பயிற்சியளித்தனர். வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜானகிராமன், சட்ட உதவி பாதுகாப்பு அமைப்பு தலைவர் செந்தில்குமார், குழு வழக்கறிஞர் சித்தீஸ்வரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரை, இளைஞர் நீதிக்குழும உறுப்பினர் அருணாதேவி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
குழந்தைகள் சட்டம் குறித்த பயிற்சி
0