Monday, April 22, 2024
Home » குழந்தைகள் கடத்தப்படுவதாக சமூக வலைத்தளத்தில் வதந்தி பரப்பியவர் கைது

குழந்தைகள் கடத்தப்படுவதாக சமூக வலைத்தளத்தில் வதந்தி பரப்பியவர் கைது

by Arun Kumar

 

திருச்சி, மார்ச் 21: குழந்தைகள் கடத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக குழந்தைகள் கடத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இதுபோன்று குழந்தை கடத்தல் சம்மந்தமான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம், வதந்திகள் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் (கடந்த 8ம் தேதி) எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் திருச்சி சோமரசம்பேட்டை அதவத்தூர் கிராம பகுதியில் கடந்த 13ம் தேதி குழந்தை கடத்துபவர்கள் வந்துள்ளதாகவும், கடத்தல்காரர்கள் காரில் வந்து இறங்கியுள்ளதாக வாட்ஸ்அப் குரூப்பில் வதந்தி பரவியது. இதனையடுத்து பொய்யான செய்தியை பரப்பியது தொடர்பாக திருச்சி மாவட்ட எஸ்.பி உதவி எண்: 9487464651 மூலம் கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில், சோமரசம்பேட்டை போலீசார் விசாரனை நடத்தினர். விசாரணையில் குழந்தை கடத்தல் தொடர்பாக பொய்யான வதந்தியை பரப்பிய குழுமணி பேரூர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த மகாமுனி (25) என்ற வாலிபர் மீது வழக்குபதிந்து அவரை சோமரசம்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

You may also like

Leave a Comment

2 + nineteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi