திருப்பூர், நவ.23: திருப்பூரில் கடும் குளிர் நிலவுவதால் ஸ்வெட்டர் விற்பனை அதிகரித்துள்ளது. திருப்பூரில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்தது. இந்த மழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது. இதனை மாநகராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர்.
இந்நிலையில், கார்த்திகை மாதம் துவங்கியதில் இருந்து குளிர் காலம் தொடங்கியது. அதனை தொடர்ந்து அதிகாலையும், மாலை நேரங்களிலும் கடும் குளிர் நிலவி வருகிறது. இதன்காரணமாக, திருப்பூர் பகுதியில் தற்போது இந்த குளிர் கால ஆடையான ஸ்வெட்டர் விற்பனை அதிகரித்து உள்ளது.
திருப்பூரில் அதிகளவிலான இரு சக்கர வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் செல்வோர் குளிரில் பாதிப்படையாமல் இருக்க ஸ்வெட்டரை பயன்படுத்துகின்றனர். அதன்படி, லூதியானாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ஸ்வெட்டர்கள் ரூ.150 முதல் ரூ.600 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனை பெரும்பாலான பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.