குளித்தலை, செப் 20: கலைஞர் மகளிர் உரிமை தொகை மேல் முறையீடு முகாம் தொடங்கியது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கிவைத்தார். இதையடுத்து மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பித்த பெண்களுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் வரவுவைக்கப்பட்டது. கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் தொகை கிடைக்காதவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் கரூர் மாவட்டம் குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று கலைஞர் மகளின் உரிமை தொகை மேல்முறையீடு சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெண்கள் தங்களுடைய விண்ணப்பித்தை அளித்து மேல்முறையீட்டுக்கு விண்ணப்பம் செய்தனர்.
புதிதாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை அளிக்கலாம் என கூறி முதல் நாள் முகாமில் ஏராளமான பெண்களிடம் மேல்முறையீட்டு பணிகளை செய்ய வந்தனர். இந்த முகாமில் குளித்தலை வட்டாட்சியர் மகுடீஸ்வரன், தலைமையில் சமூக பாதுகாப்பு தனி வட்டாட்சியர் வெங்கடேசன், தலைமை வகித்தனர். இதில் துணை வட்டாட்சியர் மதியழகன், முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் ரமேஷ், சுகப்பிரியா மற்றும் பணியாற்றி வருகின்றனர். அதனால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதகபெண்கள் குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மேல்முறையீடு சிறப்பு முகாமில் னை தெரிவித்து அதற்கான நிவாரணம் பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர.