குளித்தலை, ஜூன் 6: குளித்தலையில் 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த நீலமேக பெருமாள் கோயில் ராஜகோபுரம் கட்டுவதற்கு பாலாலய விழா நேற்று நடைபெற்றது. கரூர் மாவட்டம், குளித்தலை டவுன்ஹால் தெருவில் உள்ளது 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீலமேகப் பெருமாள் கோயில். இக் கோயில் பெருமாள் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் வருடம்தோறும் முக்கிய விழாக்கள் நடைபெறுவது நடைமுறையில் இருந்து வருகிறது. இதில் வைகாசி விசாக தேர் திருவிழா வருடம்தோறும் சிறப்பாக நடைபெறும். இத்தனை சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு கோயில் புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த ஜூலை 12ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து உபயதாரர்களால் நீலமேக பெருமாள் கோயில் நுழைவாயில் பகுதியில் ராஜகோபுரம் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்குவதற்கு முன்பு கடந்த டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி இந்து அறநிலையதுறை அதிகாரிகளின் அனுமதி பெற்று முதல் கட்டமாக ராஜகோபுரம் கட்டுவதற்கான மண் பரிசோதனை பணிகள் நடைபெற்றது.
அந்த மண் பரிசோதனை முடிந்தவுடன் அண்ணா பல்கலைக்கழக மண் மாதிரி பரிசோதனை மையத்திற்கு அனுப்பப்பட்டு அதனுடைய தரம் குறித்து அறிக்கை வந்தவுடன் ராஜகோபுரம் கட்டுவதற்காக அறநிலையதுறையிடமிருந்து உத்தரவு பெறப்பட்டது. தற்போது நீலமேக பெருமாள் கோயில் முன்புறம் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் ராஜகோபுரம் கட்டும் பணிகள் தொடங்கும் முன் பாலாலயம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் செயல் அலுவலர் சித்ரா நீலமேக கண்ணன் பட்டாச்சாரியார், உபயதாரர்கள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வங்கிகடன் வசதி
முழுமையான கல்வியை பெறவும், அவர்களை சித்தப்படுத்துவதற்காகவும், இந்த படிப்பின் போது ஸ்டார்ட்அப்- டிஎன் போன்ற பல்வேறு நிறுவனங்களுக்கு கள அனுபவங்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது.
கல்வி கட்டணத்திற்காக தேவைப்படும் மாணவர்களுக்கு, கட்டணத்திற்கான வங்கிக் கடன் வசதிகளும் செய்து தரப்படுகிறது.