குளித்தலை, ஆக. 21: குளித்தலை டவுன்ஹால் தெருவில் பழமை வாய்ந்த நீலமேகப்பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் 18ம்ஆண்டு திருபவித்ரோத்தவ மஹோத்சவம் நிகழ்ச்சி 3 நாட்கள் நடைபெற்றது.. முதல் நாள் மாலை 6 மணி முதல் விசேஷ ஆராதனம் புண்ணியாகம்,யஜமான சங்கல்பம், ஊத்தி ஹோமம் நித்திய ஹோம் பூர்ணகுதியுடன் தொடங்கியது. இரண்டாம் நாள் கும்பா ஆராதனம் விசேஷ அலங்கார திரு மஞ்சனம் மகா சாந்தி ஹோ மம் பூர்ணஹூதியுடன் தொடங்கி நடைபெற்றது.
தொடர்ந்து எம்பி எஸ் அக்ரஹாரம் லட்சுமி நாராயண பெருமாள் சன்னதியில் இருந்து வில்லிபுத்தூர் கோதை நாச்சியார் ஆண்டாள் சூடி கலைந்த கிளி மாலை வீதி வலம் வந்து உற்சவர் நீளமாக பெருமாளுக்கு சாற்றும் வைபவம் நடைபெற்றது.தொடர்ந்து பவித்திர மாலையுடன் வேத ப்ரந்த கோஷ்டியுடன் நீலமேகப் பெருமாள் திருவீதி உலா தேரோடும் வீதியில் நடைபெற்று அக்னி ப்ரணயனம் கும்ப ஆராதனம் மகா சாந்தி ஹோமம் பூர்ணாஹூதி நடைபெற்றது.
மூன்றாம் நாள் புண்ணியாகம் அக்னிப்ரணயனம், கும்ப ஆராதனம், ப்ரான் ஹோமம் நடைபெற்று 10.30 மணிக்கு மேல் 11:30 மணிக்குள் மகாபூர்ணஹூதி, திருவாரதனம் மகா திருபாவாடை புஷ்பாஞ்சலி நடைபெற்று தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை இந்து அறநிலைத்துறைஉதவி ஆணையர் இளையராஜா, செயல் அலுவலர் சித்ரா, நீலமேக கண்ணன் பட்டாச்சாரியார் மற்றும் உபயதாரர்கள் செய்து இருந்தனர்.