குளித்தலை: குளித்தலை கடம்பனேஸ்வரர் கோயிலில் தைப்பூச திருவிழா 8 ஊர் சாமிகள் சந்திப்பு மற்றும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வான் பொய்ப்பினும் தான் பொய்யா வற்றாத காவிரியின் தென் கரையிலே அமைந்து வடக்கே காசி திருத்தலப் பெருமையை காட்டிலும் மிஞ்சிய அருள் வழங்கும் சிறப்பு பெற்றதும் குபேர திசை என போற்றப்படும் வடதிசை நோக்கி எழுந்தருளி உள்ளதும் அப்பர், அருணகிரியார், ஐயடிகள், காணவக்கோன், போன்ற அருளாளர்களால் பாடப்பெற்றதும். கண்ணவ முனிவருக்கும், தேவர்களுக்கும், சிவபெருமான், கடம்பவனத்தில் கடம்ப மரத்தின் கீழ் தோன்றி காட்சியளித்ததும் மூர்த்தி தலம் தீர்த்தம் எனும் மூன்று சிறப்புகளையும் ஒருங்கி அமையப்பெற்றதும் ஆகிய கரூர் மாவட்டம் குளித்தலை திருகடம்பன் துறையில் அமைந்தருளும் முற்றிலா முலையம்மை உடனுறை கடம்பவனேஸ்வரர் கோயில். காலை கடம்பர் எனும் வழிபாட்டு சிறப்பு பெற்ற தலமாக விளங்குகிறது. சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில், கடம்பர் கோயில் முற்றிலா முலையம்மை உடனுறை கடம்பவனேஸ்வரர், பெட்டவாய்த்தலை பாலாம்பிகை உடனுறை மத்தியார் ஜூனேஸ்வரர், ராஜேந்திரம் தேவநாயகி உடனுறை மத்தியார்ஜூனேஸ்வரர் , அய்யர் மலை சுரும்பார் குழலி உடனுறை ரத்தினகிரீஸ்வரர் ,திருயோங்மலை மரகதம்பாள் உடனுறை மரகதாலேஸ்வரர், முசிறி கற்பூரவள்ளி உடனுரை சந்திரமவுலீஸ்வரர் ,வெள்ளூர் சிவகாமி உடனுரை திரு காமேஸ்வரர், கருப்பத்தூர் சுகந்த குந்தாளாம்பிகை உடனுறை சிம்மபுரீஸ்வரர் ஆகிய 8 ஊர் கோயில்களில் எழுந்தருளியுள்ள சுவாமிகள் மற்றும் அம்பாள் காவிரியில் எழுந்தருளி நம்மை நாடி நலம் வேண்டும் அன்பர்களில் இடம் போக்கி அருள் வழங்கும் தைப்பூச திருவிழா நேற்று சந்திப்பு நிகழ்ச்சியும், தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற்றது இந்த விழாவில் 8 கோயில்களில் இருந்து சோமஸ்கந்தர் அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் காட்சி கொடுப்பது என்பது வேறு எங்கும் காணக் கிடைக்காத அரிய காட்சியாகும் என்பதால், இந்த தைப்பூச தீர்த்தவாரி நிகழ்ச்சியில் பொதுமக்கள் விரதம் இருந்து தீர்த்தவாரி முடிந்தவுடன் தண்ணீரில் நீராடி சென்றனர். தொடர்ந்து அனைத்து சுவாமிகளையும் அவற்றுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் வைத்து இரவு முழுவதும் பொதுமக்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டிருந்தது. இவ்விழாவில் எம்.எல்.ஏ மாணிக்கம், ஆர்.டி.ஓ.புஸ்பாதேவி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேன்மொழி தியாகராஜன், நகர்மன்ற தலைவர் சகுந்தலா பல்லவி ராஜா மற்றும் இந்து அறநிலைதுறை அதிகாரிள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் ஜெயதேவி தலைமையில் செயல் அலுவலர்கள் நித்தியா, அனிதா, கண்ணன், சௌந்தர பாண்டி, சங்கர், மற்றும் ஆய்வாளர்கள் , சிவாச்சாரியார்கள் உபயதாரர்கள் செய்து இருந்தனர். பாதுகாப்பிற்கான ஏற்பாட்டினை டி எஸ் பி தர் தலைமையில ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்….