குளித்தலை, மே 27: முன் விரோதத்தால் ஏற்பட்ட தகராறில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (35). இவர் மீது மாடு விழுந்தான் பறையைச் சேர்ந்த அன்புராஜ் என்பவர் அவரது தங்கை இறப்பு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த 23ம் தேதி நச்சலூர் டாஸ்மாக் அருகே நின்று கொண்டிருந்த வினோத் குமாரை அன்புராஜ் மற்றும் நச்சலூரை சேர்ந்த அருள்முருகன் ஆகிய இருவரும் தகாத வார்த்தையால் திட்டி கையால் தாக்கியுள்ளனர். மேலும் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் அன்புராஜ் தாக்கியதாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் நங்கவரம் போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரை கைது செய்தனர்.