குளித்தலை, நவ. 8: அரசு பள்ளி மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள் நடந்தது. கரூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி குளித்தலைவட்டார வளமையம் சார்பில் அரசு பள்ளிகளில் 1 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கடம்பர் கோயில் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த போட்டிகளுக்கு பள்ளி அளவில் முதலிடம் (6-12 வகுப்பு க்கு),
குறுவள மைய அளவில் முதலிடம் (1-5 வகுப்புக்கு) பெற்ற மாணவர்கள் குளித்தலை மற்றும் சிறப்பு குழந்தைகள் (1-12வகுப்பு) பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவர்கள் வட்டார அளவில் கலந்து கொண்டனர். மேலும் வட்டார அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்கள், மாவட்ட அளவில் கலைத்திருவிழாவில் கலந்து கொள்வர். கலைத் திருவிழா நடக்கும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தலைமையில் கலைதிருவிழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டை வட்டார கல்வி அலுவலர் இரமணி. மேற்பார்வையாளர் ராகுகாலம் ஆசிரியர் பயிற்றுநர்கள் நிகிலா, சிவக்குமார், சிறப்பு பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.