குளித்தலை, ஜூன் 19: அரவக்குறிச்சி அரசு கல்லூரி முதல்வர் முனைவர் சுஜாதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது குளித்தலை அரசு கல்லூரியில் சேர இணைய வழியாக விண்ணப்பித்தவர்கள் மற்றும் விண்ணப்பிக்காதவர்கள் கல்லூரிக்கு நேரடியாக வந்து மாணவர் விண்ணப்பித்து இளம் அறிவியல் பாடப் பிரிவுகளில் சேர்ந்து பயன்பெறலாம். குளித்தலை அரசு கல்லூரியில் கணிதம், இயற்பியல், வேதியியல், மின்னணுவியல் ,கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல் ,உணவு மற்றும் ஊட்டச்சத்துவியல், தாவரவியல் ,விலங்கியல், மற்றும் பிகாம், பிபிஏ, பிகாம்(சி.ஏ) மற்றும் பிஏ வரலாறு பி காம் (தமிழ் வழி) பி ஏ தமிழ் பி ஏ ஆங்கிலம் ஆகிய பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகிறது.காலியாக உள்ள பாடபிரிவுகளுக்கு கலந்தாய்வு இன சுழற்சி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் காலை 10 மணிக்கு கல்லூரியில் நடைபெறவுள்ளது. எனவே மாணவர்கள் கீழ்காணும் ஆவணங்களை எடுத்து வர வேண்டும். பத்தாம் வகுப்பு, +1 மற்றும் +2மதிப்பெண் சான்றிதழ் ,சாதி சான்றிதழ், மாற்று சான்றிதழ் ,போட்டோ(2), வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை மற்றும் விண்ணப்ப படிவ நகல் மேலும் உரிய கட்டணத்துடன் வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கல்லூரி முதல்வர் முனைவர் சுஜாதா தெரிவித்துள்ளார்.