குளத்தூர், செப். 3: குளத்தூர் குழந்தை விநாயகர் கோயிலில் உழவார பணிகள் நடந்தது. தூத்துக்குடி சிவன் கோயில் தெரு அம்மையப்பர் உழவார பணிக்குழு அறக்கட்டளை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பழம்பெருமை வாய்ந்த சிவன் கோயில்களிலும் உழவார பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக விளாத்திகுளம் வட்டத்திற்குட்பட்ட குளத்தூர் ஊராட்சி தெற்கு தெரு கண்மாய் கரையோரம் அமைந்துள்ள அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட குழந்தைவிநாயகர் கோயிலில் மீனாட்சி சொக்கநாதர் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளதால். இக்கோயில் உழவார பணிகளை மேற்கொள்ள தூத்துக்குடியில் இருந்து அம்மையப்பர் உழவார பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் சீனிவாசன், மாரியப்பன் தலைமையில் ஆண்கள், பெண்கள் என 60 பேர் கொண்ட சிவபக்தர்கள் வந்திருந்தனர். இக்குழுவினர் குழந்தை விநாயகர் ஆலயத்தில் காலை முதல் மாலை வரை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். இதில் சிதிலமடைந்த பகுதிகளை சீரமைத்து கோயில் முழுவதும் வர்ணம் பூசி சீரமைத்தனர்.
குளத்தூர் குழந்தை விநாயகர் கோயிலில் உழவார பணிகள்
previous post