சேந்தமங்கலம், செப்.6: சேந்தமங்கலம் அடுத்த முத்துகாபட்டி, பாப்பன் குளத்தில் நேற்று முன்தினம் அதிகாலை, மர்ம நபர்கள் மண்வெட்டி கடத்தி வருவதாக கிராம நிர்வாக அலுவலர் அன்பழகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் விரைந்து சென்ற வருவாய்த் துறையினர், மற்றும் சேந்தமங்கலம் போலீசார் மண் வெட்டி கொண்டு இருந்த கும்பலை மடக்கி பிடித்தனர். அதில் சில தப்பி ஓடிவிட்டனர். போலீசார் பிடிபட்டவர்களிடம், விசாரணை நடத்தியதில் அவர்கள் சேந்தமங்கலம் காமராஜபுரத்தைச் சேர்ந்த முருகேசன் (45), செந்தில் (29), என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து மண் அள்ள பயன்படுத்திய 2 பொக்லைன், டிப்பர் லாரி, 4 டிராக்டர் வாகனங்களை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய முத்துகாபட்டி பெருமாபாளையத்தைச் சேர்ந்த வேலு, சேந்தமங்கலம் மேட்டு தெருவை சேர்ந்த பாலாஜி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
குளத்தில் அனுமதியின்றி மண் வெட்டி கடத்திய 2 பேர் கைது
previous post