குளச்சல், ஜூலை 13: குளச்சல் நகர காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. நகர தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் யூசுப்கான், மாவட்ட துணைத்தலைவர் தர்மராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரின்ஸ் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார். கூட்டத்தில் குளச்சல் லியோன்நகரில் 7 ஏக்கர் பரப்பில் அனைத்து இளைஞர்கள் நலனுக்கு விளையட்டு மைதானம் அமைக்க அனுமதியளித்த தமிழக அரசு மற்றும் இதனை சட்டமன்றத்தில் வலியுறுத்திய குளச்சல் எம்.எல்.ஏ.பிரின்ஸ் ஆகியோருக்கு பாராட்டி நன்றி தெரிவிக்கப்பட்டது. வரும் 15 ம் தேதி நாகர்கோவிலில் நடக்கும் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை கலந்துகொள்ளும் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாள் விழாக்கூட்டத்தில் குளச்சல் நகரில் இருந்து 25 வேன்களில் சென்று கலந்துகொள்வது உள்பட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயலாளர்கள் அந்திரியாஸ், பிராங்கிளின், கவுன்சிலர் ரமேஷ், நகர பொருளாளர் ஷாபி மற்றும் ஜாண்ட்ரோஸ், பஷீர்கான், ஜலாலுதீன், மாகீன், மரியரசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
குளச்சலில் விளையாட்டு மைதானம் தமிழக அரசுக்கு காங். பாராட்டு
40