குளச்சல், அக். 26: குளச்சல் நகர அதிமுக நாடாளுமன்ற பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நகர செயலாளர் ஆண்ட்ரோஸ் தலைமையில் நகர அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் கவுன்சிலர் ஆறுமுகராஜா, மாவட்ட மாணவர் அணி முன்னாள் செயலாளர் ரவீந்திர வர்ஷன், ஆனக்குழி சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர அவைத்தலைவர் சிட்டி சாகுல் அமீது வரவேற்று பேசினார். கூட்டத்தில் குளச்சல் நகரில் உள்ள 25 வாக்குச்சாவடிகளிலும் 5 மகளிர், 5 இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அடங்கிய 19 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைப்பது எனவும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் அறிவிக்கும் வேட்பாளரின் வெற்றிக்கு தீவிர தேர்தல் பணி செய்வது எனவும், குளச்சல் நகராட்சி வீடுகள் மற்றும் வணிக வளாகங்களிலிருந்து வெளியேறும் கழிவு நீர் குழாயை அடைக்கும் திட்டத்தை கைவிட கேட்டும் வலியுறுத்தப்பட்டது.