உடன்குடி, செப். 5: குலசேகரன்பட்டினம் தாயம்மாள் நடுநிலைப்பள்ளி, வள்ளியம்மையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் அறிவாற்றல் விழா நடந்தது. இதில் உடன்குடி, திருச்செந்தூர் ஒன்றியத்தில் உள்ள ஆரம்ப, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்ற காயல்பட்டினம் சுபைதா மேல்நிலைப்பள்ளிக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. பரிசுகளை பள்ளிக்குழு தலைவரும், அறக்கட்டளை இணை செயலாளருமான சுபாதெய்வநாயகம் மற்றும் கல்விப்பணி அறக்கட்டளை இயக்குநர்கள் வழங்கினர்.
குலசை பள்ளியில் அறிவாற்றல் விழா
previous post