உடன்குடி, மே 31: குலசேகரன்பட்டினம், செட்டியாபத்து கோயில் கும்பாபிஷேக விழா, வரும் ஜூன் 8ம் தேதி நடக்கிறது. இதில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட செட்டியாபத்து சிதம்பரேஸ்வர் கோயில் மகா கும்பாபிஷேக விழா, ஜூன் 8ம் தேதி நடக்கிறது. வரும் 5ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கி 8ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடக்கிறது.
இதற்கான அழைப்பிதழை மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து கோயில் அறங்காவலர் குழு தலைவர் மகேஷ்வரன் வழங்கினார். அப்போது கோயில் செயல்அலுவலர் பால முருகன், அறங்காவலர் குழு உறுப்பினர் சுமேந்திர பிரகாஷ், கோயில் எழுத்தர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதேபோல் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுடன் இணைந்த கடற்கரையில் உள்ள சிவகாமி அம்மன் உடனுறை சிதம்பரேஸ்வரர் கோயிலில் 70 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 8ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. இந்த இரு கும்பாபிஷேக நிகழ்ச்சிகளிலும் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு மற்றும் அறநிலைய துறை அதிகாரிகள் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.